வேளச்சேரியில் அரிவாளால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம்; 8 பேர் கைது


வேளச்சேரியில் அரிவாளால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம்; 8 பேர் கைது
x
தினத்தந்தி 22 Jun 2021 3:14 PM IST (Updated: 22 Jun 2021 3:14 PM IST)
t-max-icont-min-icon

சென்னை வேளச்சேரி எம்.ஜி.ஆர்.நகர் பகுதியை சேர்ந்தவர் விஷ்வா. இவர், கடந்த 2 தினங்களுக்கு முன்பு தனது நண்பர்களுடன் சேர்ந்து தனது பிறந்த நாளை கொண்டாடினார்.

அப்போது பிறந்த நாள் கேக்கை அரிவாளால் வெட்டினார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் பரவியது. இதுபற்றி வேளச்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெரி வழக்குப்பதிவு செய்து விஷ்வா மற்றும் அவரது நண்பர்கள் விக்னேஷ், முரளி, 
அருணாசலம், சுரேஷ், கரன், சக்திவேல், அய்யனார் ஆகிய 8 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story