திருவள்ளூர் அருகே தாய் இறந்த துக்கம் தாங்காமல் மகன் தூக்குப்போட்டு தற்கொலை


திருவள்ளூர் அருகே தாய் இறந்த துக்கம் தாங்காமல் மகன் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 22 Jun 2021 4:49 PM IST (Updated: 22 Jun 2021 4:49 PM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூரை அடுத்த பருவதராஜபுரத்தை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 42). டிரைவர் ஆவார். கடந்த 19-ந்தேதியன்று வெங்கடேசனின் தாயார் உடல்நலக்குறைவு காரணமாக இறந்து போனார்.

இந்த நிலையில் அவர், தனது தாயார் இறந்து போன சோகத்தில் மன உளைச்சலில் காணப்பட்டார். பின்னர் அவர் தன் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தன் தாயை இழந்த துக்கம் தாங்கமுடியாமல் அறையில் உள்ள மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து வெள்ளவேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Next Story