ஒட்டன்சத்திரம் காந்தி மார்க்கெட்டில் ஆந்திராவில் இருந்து இறக்குமதியாகும் தக்காளிகள் விற்பனை


ஒட்டன்சத்திரம் காந்தி மார்க்கெட்டில் ஆந்திராவில் இருந்து இறக்குமதியாகும் தக்காளிகள் விற்பனை
x
தினத்தந்தி 22 Jun 2021 6:06 PM IST (Updated: 22 Jun 2021 6:06 PM IST)
t-max-icont-min-icon

ஒட்டன்சத்திரம் காந்தி மார்க்கெட்டில் ஆந்திராவில் இருந்து இறக்குமதியாகும் தக்காளிகள் விற்பனை செய்யப்படுகிறது.

ஒட்டன்சத்திரம்:
ஒட்டன்சத்திரம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் விளைவிக்கப்படும் காய்கறிகள் ஒட்டன்சத்திரம் காந்தி மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் தற்போது ஒட்டன்சத்திரம் பகுதியில் தக்காளி சீசன் முடிந்து விட்டதால் மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து குறைந்துள்ளது. நாளொன்றுக்கு ஆயிரம் பெட்டி தக்காளி வரத்தாகும் நிலையில் தற்போது பாச்சலூர் மலைப்பகுதியில் இருந்து 500 பெட்டி தக்காளி மட்டுமே விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. இதனால் ஒட்டன்சத்திரம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதி மக்களின் தக்காளி தட்டுப்பாட்டை பூர்த்தி செய்ய ஆந்திராவில் இருந்து தினமும் 500 முதல் 600 பெட்டி தக்காளி இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. 
இந்த ஆந்திரா தக்காளி 14 கிலோ கொண்ட ஒரு பெட்டி ரூ.200-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த மாதத்தில் தக்காளி வரத்து அதிகமாக இருந்ததால் ஒரு பெட்டி தக்காளி ரூ.40-க்கு விற்பனையானது குறிப்பிடத்தக்கது.

Next Story