மூலவைகை ஆற்றில் மீன்களை பிடிக்க இளைஞர்கள் ஆர்வம்


மூலவைகை ஆற்றில் மீன்களை பிடிக்க இளைஞர்கள் ஆர்வம்
x
தினத்தந்தி 22 Jun 2021 7:05 PM IST (Updated: 22 Jun 2021 7:05 PM IST)
t-max-icont-min-icon

நீர்வரத்து குறைந்ததால் மூலவைகை ஆற்றில் இளைஞர்கள் ஆர்வமுடன் மீன்களை பிடித்து வருகின்றனர்.

கடமலைக்குண்டு:

கடமலை-மயிலை ஒன்றியம் வெள்ளிமலை வனப்பகுதியில் இருந்து மூலவைகை ஆறு உற்பத்தியாகிறது. தொடர் மழை காரணமாக, கடந்த 1 வருடத்துக்கும் மேலாக மூலவைகை ஆற்றில் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. 

கடந்த சில நாட்களாக வெள்ளிமலை வனப்பகுதியில் மழை பெய்யாததால் மூல வைகை ஆற்றில் தண்ணீர் வரத்து குறைந்துள்ளது. 
இதனால் மீன்கள், கூட்டம் கூட்டமாக ஆழமாக பகுதிக்கு இடம் பெயர்ந்து வருகின்றன. இதனையடுத்து இளைஞர்கள், கொசு வலையை பயன்படுத்தி ஆற்றில் மீன்களை ஆர்வமுடன் பிடித்து வருகின்றனர். 

இந்த மீன்கள் கிராமங்களில் கிலோ ரூ.300 வரை விற்பனை செய்யப்படுகிறது. அயிரை மீன்கள் ஒரு கிலோ ரூ.1,000-த்துக்கு விற்கப்படுகிறது.
ஊரடங்கு அமலில் உள்ளதால், கூலி வேலைக்கு செல்ல முடியாத பலர் மூலவைகை ஆற்றில் மீன்பிடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

 இதேபோல வைகை அணைக்கு அருகே உள்ள கண்டமனூர் தடுப்பணை பகுதியில் ஏராளமான மீன்கள் கிடைக்கிறது. 

இதனால் அங்கு மீன்களை பிடிப்பதற்காக மூலவைகை ஆற்றில் எப்போதும் இளைஞர்கள் கூட்டம் காணப்படுகிறது. பகலில் மட்டுமின்றி இரவிலும் மீன்பிடிக்கும் பணியில் இளைஞர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
---------

Next Story