கோவில் உண்டியலின் பூட்டை உடைத்து பணம் திருட்டு
பட்டிவீரன்பட்டியில் கோவில் உண்டியலை உடைத்து பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
திண்டுக்கல் :
திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி காந்திபுரத்தில் முருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கொரோனா பரவல் காரணமாக பக்தர்கள் அனுமதிக்கப்படுவதில்லை.
பூஜைகள் மட்டும் நடந்து வந்தது. இந்நிலையில் நேற்று பூசாரி கோவிலை திறக்க வந்தார். அப்போது, கோவில் வளாகத்தில் இருந்த உண்டியலை மர்மநபர்கள் உடைத்து அதில் இருந்த பணத்தை திருடி சென்று இருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து பட்டிவீரன்பட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து சம்பவ இடத்தை பார்வையிட்டனர். மேலும் இது சம்பந்தமாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பட்டிவீரன்பட்டி போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்த மலர்விழி, சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்த செல்வராஜ், பரமசிவம் ஆகியோர் பணிமாறுதலில் சென்றுவிட்டனர்.
எனவே இந்த காலிப்பணியிடங்ளை நிரப்பி, சமீப காலமாக நடக்கும் தொடர் திருட்டுகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
Related Tags :
Next Story