மாவட்ட செய்திகள்

பழையகாயல் அருகேகணவன், மனைவிக்கு கத்திக்குத்து + "||" + near palaya kayal, husband and wife attacked knife

பழையகாயல் அருகேகணவன், மனைவிக்கு கத்திக்குத்து

பழையகாயல் அருகேகணவன், மனைவிக்கு கத்திக்குத்து
பழைய காயல் அருகே கணவன், மனைவி கத்தியால் குத்தப்பட்டனர்.
ஆறுமுகநேரி:
பழையகாயல் அருகேயுள்ள புல்லாவெளி மேலத் தெருவை சேர்ந்தவர் சின்னசாமி (வயது 53).இவருக்கு முத்தாறு என்ற மனைவியும், 3 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.இவரது தம்பி பழனிவேல் இதே பகுதியில் வசித்து வருகிறார். இந்த 2 குடும்பத்தினர் இடையே இடப்பிரச்சினை இருந்து வந்துள்ளது. சம்பவத்தன்று சின்னச்சாமி யும் அவரது மனைவியும் சேர்ந்து வீட்டிற்கு பின் பகுதியில் கம்பி வேலி அமைப்பதற்கான பணியில் ஈடுபட்டுள்ளனர். இதை அறிந்த பழனிவேல்,
அவரது மகன்கள் அருள், தெய்வேந்திரன், விஷ்ணு, ஆகியோர் சின்னச்சாமியிடம் பாகப்பிரிவினை செய்யாத நிலையில் எப்படி கம்பி வேலி அமைக்கலாம் என கூறி தகராறு செய்துள்ளனர். தகராறு முற்றியதில் பழனிவேல், அருள், தெய்வேந்திரன், விஷ்ணு ஆகியோர் சேர்ந்து சின்னசாமியையும், அவரது மனைவியையும் கத்தியால் குத்தியதுடன், கம்பால் சரமாரியாக அடித்து உதைத்துள்ளனர். இதில் பலத்த காயமடைந்த சின்னச்சாமியும், அவரது மனைவியும்  தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து ஆத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாணிக்கராஜ் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான பழனிவேல், அவரது மகன்கள் அருள், தேவேந்திரன், விஷ்ணு ஆகிய 4 பேரையும் தேடிவருகிறார்.

தொடர்புடைய செய்திகள்

1. பிளவுஸ் தைக்க மறுத்த கணவன்.. தற்கொலை செய்துகொண்ட மனைவி...!
கதவை திறந்து பார்த்தபோது வீட்டின் படுக்கை அறையில் மனைவி இறந்த நிலையில் கிடந்துள்ளார்.
3. கணவன், மனைவிக்கு கத்திக்குத்து
கச்சிராயப்பாளையம் அருகே கணவன், மனைவிக்கு கத்திக்குத்து விழுந்தது.
4. சமூக வலைதள காதல்: கணவன்,பிள்ளைகளை உதறிய பெண் - காதலன் ஏற்காததால் தூக்குப்போட்டு தற்கொலை
கணவர், 2 மகள்களை உதறிவிட்டு ராமநாதபுரம் வந்த இளம்பெண்ணை, காதலன் திருமணம் செய்ய மறுத்ததால், அந்த பெண் அரசு ஆஸ்பத்திரியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட விபரீத சம்பவம் நடந்துள்ளது.