ரூ.327 கோடியில் அரசு மருத்துவ கல்லூரி கட்டிட பணி
திண்டுக்கல் அருகே ரூ.327 கோடியில் கட்டப்படும் அரசு மருத்துவ கல்லூரி கட்டிட பணியை கலெக்டர் விசாகன் ஆய்வு செய்தார்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் அருகே ஒடுக்கத்தில் ரூ.327 கோடி மதிப்பீட்டில் அரசு மருத்துவ கல்லூரி அமைகிறது. இதற்கான கட்டிடம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.
இதில் மருத்துவ கல்லூரி, மருத்துவமனை, பல்வேறு சிகிச்சை பிரிவுகள், டாக்டர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள் தங்குமிடம், மருத்துவ கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு விடுதிகள் உள்ளிட்டவை கட்டப்படுகின்றன.
இந்த பணிகளை நேற்று திண்டுக்கல் கலெக்டர் விசாகன் ஆய்வு செய்தார். அப்போது கட்டுமான பணிகளை விரைந்து முடிக்குமாறு பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின் போது பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் தங்கவேல், மருத்துவ கல்லூரி முதல்வர் விஜயகுமார், அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் சுரேஷ்பாபு மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story