தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிப்பு


தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று  தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிப்பு
x
தினத்தந்தி 22 Jun 2021 9:09 PM IST (Updated: 22 Jun 2021 9:09 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று (புதன்கிழமை) தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
இது குறித்து மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள ெசய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
தடுப்பூசி முகாம்
தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று (புதன்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கொரோனா தடுப்பூசி முகாம் மற்றும் காய்ச்சல் முகாம் நடக்கிறது.
தூத்துக்குடி மாநகராட்சியில் தூத்துக்குடி அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லூரியில் 800 நபர்களுக்கும், பாளையங்கோட்டை ரோடு புனித மரியன்னை ஆண்கள் மேல்நிலைபள்ளியில் 200 நபர்களுக்கும், கணேஷ்நகர் மாநகர ஆரம்ப சுகாதார நிலையத்தில் 100 நபர்களுக்கும், மடத்தூர் மாநகர ஆரம்ப சுகாதார நிலையத்தில் 100 நபர்களுக்கும் தடுப்பூசி போடப்படுகிறது. தூத்துக்குடி ஊரக பகுதிகளில் புதுக்கோட்டை பி.எஸ்.பி பள்ளியில் 50 நபர்களுக்கும், குலையன்கரிசல் அபிசேகநாதர் பள்ளியில் 50 நபர்களுக்கும், ரத்தினபுரி அங்கன்வாடி மையத்தில் 50 நபர்களுக்கும், பெரிய செல்வ நகர் அங்கன்வாடி மையத்தில் 100 நபர்களுக்கும், மாப்பிள்ளையூரணி ஆரம்ப சுகாதார நிலையத்தில் 50 நபர்களுக்கும், முடிவைத்தானேந்தல் ஆரம்ப சுகாதார நிலையத்தில் 20 நபர்களுக்கும், நடுகூட்டுடன்காடு பஞ்சாயத்து யூனியன் பள்ளியில் 50 நபர்களுக்கும், கிள்ளிகுளத்தில் 50 நபர்களுக்கும், உடையார்குளத்தில் 50 நபர்களுக்கும், அனவரதநல்லூரில் 50 நபர்களுக்கும், நட்டார்குளத்தில் 50 நபர்களுக்கும், செட்டிமல்லன்பட்டியில் 50 நபர்களுக்கும், சீத்தார்குளத்தில் 50 நபர்களுக்கும், சவேரியார்புரம் டி.பி, மங்களகுறிச்சியில் 100 நபர்களுக்கும் தடுப்பூசி போடப்படுகிறது.
ஒத்துழைப்பு
இதே போன்று உடன்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 50 நபர்களுக்கும், மாரியம்மன் கோவில் தெருவில் 50 நபர்களுக்கும், புதுமனையில் 50 நபர்களுக்கும், வில்லிகுடியிருப்பில் 50 நபர்களுக்கும், மாதவன்குறிச்சியில் 50 நபர்களுக்கும், தாண்டவன்காட்டில் 50 நபர்களுக்கும், காயல்பட்டினம் அரசு மருத்துவமனையில் 100 நபர்களுக்கும், காயல்பட்டினம் மஜிலிஸ் புகாரி சாரிப், முத்துவாப்பா தைக்கா தெருவில் 200 நபர்களுக்கும், சாகுபுரத்தில் 150 நபர்களுக்கும், வீரபாண்டியன்பட்டினம் கருணாலயா மாற்றுதிறனாளி இல்லத்தில் 30 நபர்களுக்கும், அடைக்கலாபுரம் மாற்றுதிறனாளி இல்லத்தில் 80 நபர்களுக்கும், குரும்பூர் டி.எ.பி கல்யாண மஹாலில் 100 நபர்களுக்கும், நாலுமாவடி ஏசு விடுவிக்கிறார் சபையில் 100 நபர்களுக்கும், சாத்தான்குளம் ஸ்டீபன் பள்ளியில் 100 நபர்களுக்கும், தேரிபனை, அங்கன்வாடி மையத்தில் 100 நபர்களுக்கும், தைலாபுரம் அங்கன்வாடி மையத்தில் 100 நபர்களுக்கும், கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் 100 நபர்களுக்கும் தடுப்பூசி போடப்படுகிறது.
எனவே பொதுமக்கள் அனைவரும் முகாம்களில் தவறாது கலந்து கொண்டு தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Next Story