சாராயம் கடத்திய 9 பேர் கைது


சாராயம் கடத்திய 9 பேர் கைது
x
தினத்தந்தி 22 Jun 2021 9:31 PM IST (Updated: 22 Jun 2021 9:31 PM IST)
t-max-icont-min-icon

கீழ்வேளூர் பகுதியில் சாராயம் கடத்தி வந்த 9 பேரை போலீசார் கைது செய்தனர்.. மேலும் அவர்களிடம் இருந்து 8 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.

சிக்கல்:
கீழ்வேளூர் பகுதியில் சாராயம் கடத்தி வந்த 9 பேரை போலீசார் கைது செய்தனர்.. மேலும் அவர்களிடம் இருந்து 8 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.
ரோந்து பணி
கீழ்வேளூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் கலியபெருமாள் மற்றும் போலீசார் கீழ்வேளூர் அருகே ராதாமங்கலம்- எறும்புகன்னி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் சந்தேகப்படும் வகையில் நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர், எறும்புகன்னியை சேர்ந்த முருகையன் மகன் தமிழ் குடிமகன் (வயது 28). என்பதும், இவர் காரைக்கால் பகுதியில் இருந்து சாராயம் கடத்தி வந்து விற்பனை செய்வதும் தெரியவந்தது. 
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தமிழ் குடிமகனை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர். 
 
8 பேர் கைது

இதேபோல கீழ்வேளூர் போலீசார் கீழ்வேளூர்- கச்சனம் சாலை சந்திப்பு, கானூர் சோதனை சாவடி பகுதிகளில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மோட்டார் சைக்கிள்களில் காரைக்கால் பகுதியில் இருந்து சாராயம் கடத்தி வந்த திருத்துறைப்பூண்டி, கீழ சிங்காளந்தி, சுப்ரமணியன் மகன் குமார் (42), திருவாரூர் புலிவலம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த அஞ்சான் மகன் சூர்யா (24), மன்னார்குடி கோவில் பத்து மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த வீரப்பன் மகன் ராஜேஷ் (23), மன்னார்குடி பெரிய குருவாடி நடுத்தெருவை சேர்ந்த செல்வராஜ் மகன் தீபன்ராஜ் (23), கூத்தாநல்லூர் பண்டககுடியை சேர்ந்த கணேசன் மகன் அருள் (39), மன்னார்குடி தென்பரை அம்பேத்கர் நகரை சேர்ந்த முருகையன் மகன் அய்யப்பன் (22), பொன்னிரை இளவரசநல்லூரை சேர்ந்்த நடேசன் மகன் சுரேஷ் (39), திருத்துறைப்பூண்டி பெரிய சிங்காளந்தியை சேர்ந்த சாமிநாதன் மகன் கணபதி (24) ஆகிய 8 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 8 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து தலா 10 லிட்டர் சாராயம் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய 8 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.

Next Story