ஸ்ரீவைகுண்டம் அருகே வீடுபுகுந்து 20 வுன் நகைகள் கொள்ளை


ஸ்ரீவைகுண்டம் அருகே வீடுபுகுந்து 20 வுன் நகைகள் கொள்ளை
x
தினத்தந்தி 22 Jun 2021 9:58 PM IST (Updated: 22 Jun 2021 9:58 PM IST)
t-max-icont-min-icon

ஸ்ரீவைகுண்டம் அருகே பட்டப்பகலில் வீட்டில் புகுந்து 20 பவுன் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.

ஸ்ரீவைகுண்டம்:
ஸ்ரீவைகுண்டம் அருகே பட்டப்பகலில் வீட்டில் புகுந்து 20 பவுன் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
ஒலிபெருக்கி உரிமையாளர்
ஸ்ரீவைகுண்டம் தாலுகா சேரகுளம் அருகே உள்ள வல்லகுளம் நாடார் தெருவைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது 52). இவர் இந்த பகுதியில் ஒலிபெருக்கி கடை வைத்து நடத்தி வருகிறார். நேற்று மதியம் இவர் தொழிலுக்காக வெளியூர் சென்று விட்டார். அவருடைய மனைவி ஜெயராணி பீடிக்கடைக்கு சென்று விட்டார்.
வழக்கம் போல வீட்டில் உள்ள சாவியை குறிப்பிட்ட இடத்தில் வைத்து விட்டு செல்வது வழக்கம். அதுபோல நேற்றும் வீட்டுச்சாவியை ஜெயராணி ஒரு குறிப்பிட்ட இடத்தில் வைத்துவிட்டுச் சென்றார்.
நகைகள் கொள்ளை
பின்னர் 2 மணி நேரம் கழித்து ஜெயராணி வீட்டுக்கு வந்தார். அப்போது கதவு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த 20 பவுன் நகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்று இருப்பது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் சேரகுளம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அல்லி ராஜன், செய்துங்கநல்லூர் சப்- இன்ஸ்பெக்டர் கருத்தையா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டனர். மேலும் கைரேகை நிபுணர்களும் வந்து அங்கு பதிவாகியிருந்த கைரேகைகளை பதிவு செய்தனர். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
போலீசார் விசாரணை
சாவி இருக்கும் இடம் தெரிந்து வீட்டை திறந்து நகைகளை கொள்ளையடித்துச் சென்றவர், அடிக்கடி வீட்டுக்கு வந்து செல்பவரா அல்லது வெளியூரில் இருந்து வந்து திருடினார்களா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். பட்டப்பகலில் வீடுபுகுந்து 20 பவுன் நகைகளை கொள்ளையடித்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story