தென்னையில் ஏறியவர் தவறி விழுந்து பலி
தென்னையில் ஏறியவர் தவறி விழுந்து பலியானார்.
ராமநாதபுரம், ஜூன்.
பரமக்குடி கலையூர் பகுதியை சேர்ந்தவர் கருப்பன் மகன் சண்முகம் (வயது 45). கூலித்தொழிலாளியான இவர் ராமநாதபுரம் அருகே சாத்தான்குளம் பகுதியில் உள்ள தோப்பு ஒன்றில் தேங்காய் பறிக்க சென்றுள்ளார். மரத்தில் ஏறி தேங்காய் பறிக்க முயன்றபோது மயக்கம் ஏற்பட்டு தவறி கீழே விழுந்தார். படுகாயமடைந்த அவர் சிகிச்சைக்காக ராமநாதபுரம் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேல்சிகிச்சைக்காக மதுரை தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்து போனார். இதுகுறித்து அவரின் மனைவி வையமுத்து அளித்த புகாரின் அடிப்படையில் ராமநாதபுரம் கேணிக்கரை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story