மாவட்டத்தில் 3,500 மாற்றுத்திறனாளிகளுக்கு கொரோனா தடுப்பூசி

புதுக்கோட்டை, ஜூன்.23-
புதுக்கோட்டையில் சுகாதார பணியாளர்கள், மாற்றுத்திறனாளிகளின் வீட்டிற்கு சென்று கொரோனா தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். புதுக்கோட்டை அய்யனார்புரம், காந்தி நகரில் நேற்று மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கு சென்று அவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போட்டனர். இந்த பணியை கலெக்டர் கவிதா ராமு பார்வையிட்டார். அதன்பின் அவர் நிருபர்களிடம் கூறுகையில், ``தடுப்பூசி முகாம்களுக்கு வரஇயலாத மாற்றுத்திறனாளிகளுக்கு முக்கியத்துவம் அளித்து அவர்களின் இல்லங்களுக்கே சென்று தடுப்பூசிகள் வழங்கிட முதல்-அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். அதனடிப்படையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் சிறப்பு மருத்துவக்குழுக்கள் அமைக்கப்பட்டு மாற்றுத்திறனாளிகளின் இல்லங்களுக்கே சென்று தடுப்பூசி போடப்படுகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்றைய தினம் அதாவது (நேற்று முன்தினம்) 1,500 மாற்றுத்திறனாளிகளின் இல்லங்களுக்கு நேரடியாக சென்று தடுப்பூசிபோடப்பட்டுள்ளது. (இன்று அதாவது நேற்று) 2 ஆயிரம் மாற்றுத்திறனாளிகளுக்கு அவர்களின் வீட்டிற்கு நேரடியாக சென்று தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மத்திய அரசு வழங்க கூடிய தடுப்பூசி எண்ணிக்கைகளின் அடிப்படையிலும், தினசரி தேவைக்கேற்பவும் மாவட்டம் முழுவதும் தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருகிறது'' என்றார்.

Related Tags :
Next Story