புதிதாக 78 பேருக்கு கொரோனா தொற்று - 4 பேர் பலி


புதிதாக 78 பேருக்கு கொரோனா தொற்று - 4 பேர் பலி
x
தினத்தந்தி 22 Jun 2021 11:11 PM IST (Updated: 22 Jun 2021 11:11 PM IST)
t-max-icont-min-icon

புதிதாக 78 பேருக்கு கொரோனா தொற்று - 4 பேர் பலி

புதுக்கோட்டை, ஜூன்.23-
புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று புதிதாக 78 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 26 ஆயிரத்து 363 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 130 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதனால் டிஸ்சார்ஜ் ஆனவர்களின் எண்ணிக்கை 25 ஆயிரத்து 435 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு தற்போது 631 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் 4 பேர் பலியாகினர். இதனால் மாவட்டத்தில் இறப்பு எண்ணிக்கை 297 ஆக உயர்ந்துள்ளது. அரிமளம் பகுதியில் 7 பேருக்கு நேற்று புதிதாக தொற்று ஏற்பட்டிருந்தது. அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.

Next Story