5 சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 13 போலீசார் இடமாற்றம்


5 சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 13 போலீசார் இடமாற்றம்
x
தினத்தந்தி 22 Jun 2021 11:22 PM IST (Updated: 22 Jun 2021 11:23 PM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் மாவட்டத்தில் 5 சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 13 போலீசார் இடமாற்றம் செய்யப்பட்டனா்.

விழுப்புரம், 

விழுப்புரம் மாவட்டம் வளவனூர் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த ரங்கராஜ் விழுப்புரம் மாவட்ட தலைமையிடத்து தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டராகவும், ஆரோவில் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் விழுப்புரம் உட்கோட்ட தனிப்பிரிவு சப்- இன்ஸ்பெக்டராகவும், சத்தியமங்கலம் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் திண்டிவனம் உட்கோட்ட தனிப்பிரிவுக்கும், செஞ்சி சப்-இன்ஸ்பெக்டர் ராஜாராம் செஞ்சி உட்கோட்ட தனிப்பிரிவுக்கும், வானூர் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் கோட்டக்குப்பம் உட்கோட்ட தனிப்பிரிவுக்கும் மற்றும் 6 சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள், 2 ஏட்டுகள் என 8 பேர் மாவட்டத்திற்குள் வெவ்வேறு போலீஸ் நிலையங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா பிறப்பித்துள்ளார்.

Next Story