வால்பாறையில் வீட்டில் பதுக்கி கஞ்சா விற்ற பெண் கைது


வால்பாறையில் வீட்டில் பதுக்கி கஞ்சா விற்ற பெண் கைது
x
தினத்தந்தி 23 Jun 2021 12:16 AM IST (Updated: 23 Jun 2021 12:16 AM IST)
t-max-icont-min-icon

வால்பாறையில் வீட்டில் பதுக்கி வைத்து கஞ்சா விற்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.71 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

வால்பாறை

வால்பாறையில் வீட்டில் பதுக்கி வைத்து கஞ்சா விற்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.71 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. 

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- 

கஞ்சா விற்பனை 

வால்பாறை காமராஜ் நகர் குடியிருப்பு பகுதியில் பெண் ஒருவர் வீட்டில் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. 

இதையடுத்து வால்பாறை இன்ஸ்பெக்டர் மகேஷ்வரி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். 

அதில் அந்தப்பகுதியை சேர்ந்த முத்துலட்சுமி (வயது 32) என்பவர் வீட்டில் கஞ்சா விற்பனை செய்வது தெரியவந்தது. 

இதையடுத்து போலீசார் அந்த பெண்ணின் வீட்டிற்குள் அதிரடியாக நுழைந்து சோதனை செய்தனர்.

பெண் கைது 

அப்போது அங்கு 1 கிலோ 350 கிராம் கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து போலீசார் அந்த பெண்ணை பிடித்து விசாரணை செய்தபோது, வீட்டில் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்தது உறுதியானது.

இதையடுத்து போலீசார் முத்துலட்சுமியை கைது செய்ததுடன், அவருடைய வீட்டில் இருந்த கஞ்சா மற்றும் ரூ.71 ஆயிரம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். 

தொடர்ந்து போலீசார் காமராஜ் நகர் பகுதி மற்றும் வால்பாறை நகர் பகுதி முழுவதும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.


Next Story