திருச்சியில் தீப்பிடித்து எரிந்த மினிலாரி


திருச்சியில் தீப்பிடித்து எரிந்த மினிலாரி
x
தினத்தந்தி 23 Jun 2021 12:18 AM IST (Updated: 23 Jun 2021 12:18 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி எடமலைப்பட்டி புதூர் பாலத்திற்கு அடியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த மினிலாரி திடீரென தீப்பிடித்து எரிந்தது.

கே.கே.நகர், 
திருச்சி எடமலைப்பட்டி புதூர் பாலத்திற்கு அடியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த மினிலாரி திடீரென தீப்பிடித்து எரிந்தது.
மினிலாரி

சென்னை பல்லாவரத்தை சேர்ந்தவர் மகேந்திரன். இவருக்கு சொந்தமான மினிலாரியை அதே பகுதியை டிரைவர் ரவீந்திரன் என்பவர் ஓட்டி வந்தார். அரியலூரில் கட்டிட பொருட்களை இறக்கி விட்டு திருச்சிக்கு நேற்று முன்தினம் இரவு வந்தார்.

திருச்சி எடமலைப்பட்டிபுதூர் ரெயில்வே மேம்பாலத்தின் அடியில் மினிலாரியை நிறுத்திவிட்டு, அருகில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு டிரைவர் ரவீந்திரன் சென்றார்.

தீப்பிடித்து எரிந்தது

இந்நிலையில் நேற்று மதியம் 12.30 மணி அளவில் அந்த மினிலாரி திடீரென தீ பிடித்து எரிந்தது. இதனை பார்த்த அப்பகுதி மக்கள் உடனடியாக கண்டோன்மென்ட் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். 

தீயணைப்பு மற்றும் மீட்பு பணி துறையினர் மாவட்ட உதவி அதிகாரி கருணாகரன், நிலைய அதிகாரி மெல்க்யு ராஜா தலைமையில் விரைந்து வந்து மினிலாரியில் எரிந்து கொண்டிருந்த தீயை தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைத்தனர். இதனால் தீ காற்றில் மற்ற பகுதிகளுக்கு பரவாமல் உடனடியாக கட்டுப்படுத்தப்பட்டது.

போலீஸ் விசாரணை

இதுபற்றி எடமலைப்பட்டிபுதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். லாரி நிறுத்தப்பட்டு இருந்த இடம் அருகில் ஏராளமான குப்பைகள் கிடந்தன. குப்பையில் பிடித்த தீ காற்றினால் மினிலாரிக்கும் பரவி இருக்கலாம் என்று போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.

Next Story