திருப்பூர் மாநகராட்சி பகுதியில் இன்று (புதன்கிழமை) 34 பள்ளிகளில் கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது.

திருப்பூர் மாநகராட்சி பகுதியில் இன்று 34 பள்ளிகளில் கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது.
திருப்பூர்
திருப்பூர் மாநகராட்சி பகுதியில் இன்று (புதன்கிழமை) 34 பள்ளிகளில் கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது.
தடுப்பூசி போடும் பள்ளிகள்
திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 17 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன. ஒரு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு 2 பள்ளிகள் வீதம் 34 பள்ளிகளில் இன்று (புதன்கிழமை) கொரோனா தடுப்பூசி முகாம் நடக்கிறது.
18 வயது, 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி நடக்கிறது. அதன்படி இன்று 15 வேலம்பாளையம் பள்ளி, அனுப்பர்பாளையம் நடுநிலைப்பள்ளி, எம்.எஸ். நகர் நிர்மலா பள்ளி, திருநீலகண்ட புரம் பள்ளி, வாலிபாளையம் மாநகராட்சி ஆரம்பப்பள்ளி, ஓடக்காடு மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி, கருமாரம்பாளையம் ரோட்டரி பள்ளி, மண்ணரை மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி, சேரன் நகர் மாநகராட்சி ஆரம்பபள்ளி, நல்லூர் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி, பழனியம்மாள் மேல்நிலைப்பள்ளி, கே.எஸ்.சி. அரசு மேல்நிலைப்பள்ளி, பாரதிநகர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, கே.செட்டிபாளையம் உயர்நிலைப்பள்ளி, என்.ஆர். கே. புரம் பள்ளி, பாப்பநாயக்கன் பாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, பிச்சம்பாளையம் புதூர் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி, பொன்னி பள்ளி ஆகிய பள்ளிகளில் கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது.
34 பள்ளிகள்
மேலும் சந்திரகாவி மாநகராட்சி பள்ளி, பாலமுருகன் நகர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, பெரியார் காலனி மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, கொங்கு வேளாளர் பள்ளி, கதிரவன் மெட்ரிக் பள்ளி, கருவம்பாளையம் பள்ளி, திருமுருகன் மெட்ரிக் பள்ளி, நெருப்பெரிச்சல் மாநகராட்சி ஆரம்பப்பள்ளி, குமாரானந்தபுரம் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி, எஸ்.வி.காலனி பள்ளி, குப்பாண்டம்பாளையம் மாநகராட்சி பள்ளி, தென்னம்பாளையம் பள்ளி, பெரிச்சிபாளையம் மாநகராட்சி பள்ளி, வீரபாண்டி மேல்நிலைப்பள்ளி, இடுவம்பாளையம் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி, ஆண்டிபாளையம் பள்ளி ஆகிய 34 பள்ளிகளில் கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது.
ஒவ்வொரு பள்ளியிலும் தலா 150 பேருக்கு ஏற்கனவே டோக்கன் வழங்கப்பட்டு டோக்கன் பெற்றவர்களுக்கு மட்டும் தடுப்பூசி போட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story