உடுமலை பகுதியில் நெல் அறுவடை எந்திரங்களுக்கு தட்டுப்பாடு இல்லை என்று வேளாண்துறையினர் தெரிவித்துள்ளனர்.

உடுமலை பகுதியில் நெல் அறுவடை எந்திரங்களுக்கு தட்டுப்பாடு இல்லை என்று வேளாண்துறையினர் தெரிவித்துள்ளனர்.
x
தினத்தந்தி 22 Jun 2021 7:30 PM GMT (Updated: 2021-06-23T01:00:20+05:30)

உடுமலை பகுதியில் நெல் அறுவடை எந்திரங்களுக்கு தட்டுப்பாடு இல்லை என்று வேளாண்துறையினர் தெரிவித்துள்ளனர்.

போடிப்பட்டி
உடுமலை பகுதியில் நெல் அறுவடை எந்திரங்களுக்கு தட்டுப்பாடு இல்லை என்று வேளாண்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஆட்கள் பற்றாக்குறை
உடுமலை பகுதியில் கல்லாபுரம், பூச்சிமேடு, வேல் நகர், மாவிளம்பாறை, மயிலாடும்பாறை, பூளவாடி புதூர் உள்ளிட்ட பகுதிகளில் தற்போது 2 ம் போகத்தில் 1000 ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த பகுதிகளில் தற்போது நெல் அறுவடை தீவிரமாக நடைபெற்று வருகிறது. இங்கு நெல் அறுவடை செய்வதற்கு கூலி ஆட்கள் பற்றாக்குறை நிலவி வருவதால் கடந்த சில ஆண்டுகளாகவே அறுவடைக்கு எந்திரங்களை மட்டுமே நம்பியிருக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் அறுவடை சமயத்தில் எந்திரங்களுக்குப் பற்றாக்குறை ஏற்பட்டு கூடுதல் வாடகை கொடுக்க வேண்டிய நிலை உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.இதனையடுத்து இந்த பகுதிகளில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
அறுவடை எந்திரங்கள்
இதுகுறித்து வேளாண்துறை அதிகாரிகள் கூறியதாவது:- உடுமலை வட்டாரத்தில் சுமார் 1000 ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ள நிலையில் 850 ஏக்கர் வரை தற்போது அறுவடை முடிந்துள்ளது. வெளி மாவட்டங்களிலிருந்து கொண்டு வரப்பட்ட 17 தனியார் அறுவடை எந்திரங்கள் அறுவடைப் பணியில் ஈடுபட்டு வருகின்றன.மீதமுள்ள நெற்பயிர்களும் இன்னும் ஒருசில நாட்களில் அறுவடை செய்யப்பட்டு விடும். தற்போதைய நிலையில் அறுவடை எந்திரங்களுக்கு தட்டுப்பாடு இல்லை. ஆனாலும் மற்ற சில மாவட்டங்களைப் போல வேளாண் பொறியியல் துறை மூலம் குறைந்த வாடகையில் அறுவடை எந்திரங்கள் விவசாயிகளுக்கு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளோம்.
அதனடிப்படையில் வரும் பருவங்களில் நெல் அறுவடைக் காலத்தில் வேளாண் பொறியியல் துறை மூலம் அறுவடை எந்திரங்கள் குறைந்த வாடகையில் வழங்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story