நாளை மின்சாரம் நிறுத்தம்


நாளை மின்சாரம் நிறுத்தம்
x
தினத்தந்தி 23 Jun 2021 1:10 AM IST (Updated: 23 Jun 2021 1:10 AM IST)
t-max-icont-min-icon

சிவகாசி, சுக்கிரவார்பட்டியில் பராமரிப்பு பணிகளுக்காக நாளை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

சிவகாசி, 
சிவகாசி, சுக்கிரவார்பட்டியில் பராமரிப்பு பணிகளுக்காக நாளை மின்சாரம் நிறுத்தப்படுகிறது. 
சுக்கிரவார்பட்டி
சிவகாசி மின்வாரிய பகிர்மான செயற்பொறியாளர் முரளிதரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சிவகாசி கோட்டத்தில் உள்ள சிவகாசி, அனுப்பன்குளம், கங்கரக்கோட்டை, சுக்கிரவார்பட்டி, நென்மேனி ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை (வியாழக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. 
இந்த துணை மின் நிலையங்களில் இருந்து மின்சாரம் பெறும் சிவகாசி, சாட்சியாபுரம், ரிசர்வ்லைன், தொழிற்பேட்டை, இ.பி.காலனி, போலீஸ்காலனி, அய்யப்பன்காலனி, அய்யனார்காலனி, விஸ்வம்நகர், சசிநகர், எஸ்.எப்.ஆர்.கல்லூரி, சித்துராஜபுரம், அண்ணாமலையார் காலனி, அருண்நகர், கருமன்கோவில்ரோடு, மீனம்பட்டி, ராமசாமிபுரம், சந்தனமாரியம்மன்நகர் ஆகிய பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது. 
அனுப்பன்குளம் 
 அதேபோல அனுப்பன்குளம் தென்பகுதி, மயிலாடுதுறை, பேராபட்டி, ராமலிங்காபுரம், கோணம்பட்டி, சின்னகாமன்பட்டி, தூங்காரெட்டியபட்டி, நாரணாபுரம், பந்துவார்பட்டி, புதுசூரங்குடி, கம்மாசூரங்குடி, மேலபுதூர், பி.சி.புரம், சாணார்பட்டி, நமஸ்கரித்தான் பட்டி, எம்.புதுப்பட்டி, காளையார்குறிச்சி, மேட்டுப்பட்டி, அதிவீரன்பட்டி, சுக்குவார்பட்டி, ரெங்காநகர், முத்துசாமிபுரம், கோசுகுண்டு, முத்தார் பட்டி, ராமசாமிபுரம், பாப்பாகுடி ஆகிய பகுதிகளிலும் மின்வினியோகம் இருக்காது. 
இவ்வாறு அதில் கூறப்படுகிறது.
சூலக்கரை
விருதுநகர் சூலக்கரை துணைமின் நிலையத்தில் நாளை பராமரிப்பு பணி நடைபெறுகிறது. எனவே நாளை காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை சூலக்கரை கிராமம், கலெக்டர் அலுவலக வளாகம், ஆயுதப்படை போலீஸ் குடியிருப்பு, கே.செவல்பட்டி, மீசலூர், அழகாபுரி, தாதம்பட்டி, கூரைக்குண்டு, மாத்திநாயக்கன்பட்டி, மாடர்ன் நகர், தொழிற்பேட்டை வளாகம் உள்ளிட்ட பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்படும் என மின் நிர்வாக என்ஜினீயர் அகிலாண்டேஸ்வரி  கூறினார்.


Next Story