சுமை தூக்கும் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்


சுமை தூக்கும் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 23 Jun 2021 1:18 AM IST (Updated: 23 Jun 2021 1:18 AM IST)
t-max-icont-min-icon

சுமை தூக்கும் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பெரம்பலூர்:
பெரம்பலூரில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் பெரம்பலூர் வட்ட செயல்முறை கிடங்கு முன்பு அகில இந்திய தொழிற்சங்க மய்யக் கவுன்சில் சுமை தூக்கும் தொழிலாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு கவுன்சிலின் ஒன்றிய செயலாளர் மணிகண்டன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள், சுமை தூக்குவோரை முன்களப்பணியாளர்களாக அரசு அறிவித்து, சுமை தூக்குவோருக்கு சிறப்பூதியமாக ரூ.10 ஆயிரமும் வழங்க வேண்டும். மேலும் ரூ.10 லட்சத்துக்கு மருத்துவ காப்பீடு செய்து கொடுக்க வேண்டும். கிட்டங்கிகளிலேயே தடுப்பூசி வழங்கிட வேண்டும். கொரோனா பாதித்தவர்களுக்கு விடுப்பு கால ஊதியம், மருத்துவ செலவுகளை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

Next Story