கஞ்சா விற்ற 3 பேர் கைது


கரூர்
x
கரூர்
தினத்தந்தி 23 Jun 2021 1:23 AM IST (Updated: 23 Jun 2021 1:23 AM IST)
t-max-icont-min-icon

கஞ்சா விற்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

கரூர்
கரூர் வெங்கமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் மாரிமுத்து தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அரசு காலனி பொதுக்கழிவறை அருகே கஞ்சா விற்றுக் கொண்டிருந்த சதாம் உசேன் (வயது 23), கார்த்திக் (21), ராம்குமார் (21) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ஒரு கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
இதேபோல, கரூர் டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அமராவதி ஆறு அருகே உள்ள மாவடியான் கோவில் தெருவில் கஞ்சா விற்றதாக சந்தோஷ் (22), கோபி (47), ராகவேந்திரன் (19) சஞ்சய் குமார் (20) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 3 கிலோ கஞ்சா மற்றும் ரூ.2 ஆயிரம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. தப்பி ஓடிய வினோத்குமாரை போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story