கொரோனா தடுப்பு நடவடிக்கை ஆய்வு கூட்டம்


கொரோனா தடுப்பு நடவடிக்கை ஆய்வு கூட்டம்
x
தினத்தந்தி 23 Jun 2021 9:31 AM IST (Updated: 23 Jun 2021 9:31 AM IST)
t-max-icont-min-icon

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுபடி தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.

திருவள்ளூர், 

திருவள்ளூர் மாவட்டத்தி்ல் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வரும் காரணத்தால் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுபடி தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த நிலையில் திருவள்ளூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்த ஆய்வு கூட்டம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) வித்யா, திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரி மற்றும் மருத்துவ கல்லூரி முதல்வர் அரசி, குடும்ப நலம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குனர் டாக்டர் ராணி, சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் டாக்டர் ஜவஹர்லால் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story