அனகாபுத்தூரில் லாரி டிரைவர் குத்திக்கொலை உறவினர்கள் 3 பேர் கைது


அனகாபுத்தூரில் லாரி டிரைவர் குத்திக்கொலை உறவினர்கள் 3 பேர் கைது
x
தினத்தந்தி 23 Jun 2021 4:57 AM GMT (Updated: 2021-06-23T10:27:06+05:30)

அனகாபுத்தூரில் லாரி டிரைவர் குத்திக்கொலை உறவினர்கள் 3 பேரை கைது செய்தனர்.

தாம்பரம், 

சென்னை அடுத்த அனகாபுத்தூர் பக்தவச்சலம் தெருவை சேர்ந்தவர் தேவேந்திரன்(வயது 40). சொந்தமாக லாரி வைத்து ஓட்டி வந்தார். இதே தெருவில் வசிக்கும் தேவேந்திரன் உறவினர் சங்கர் (60). இதில், சங்கர் குடும்பத்தினருக்கும் தேவேந்திரனுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று இரவு தேவேந்திரன் தன்னுடைய லாரியை வீட்டருகே நிறுத்தினார். அப்போது சங்கரின் மகன்களான பிரபாகர், மோகன் ராஜ், மோகனலிங்கம் ஆகியோர் லாரியை நிறுத்த கூடாது எனக் கூறி அவரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.அப்போது அவர்கள் கத்தியால் தேவேந்திரனை குத்தியதில் இறந்தார். இந்த சம்பவம் தொடர்பாக சங்கர் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மோகன்ராஜ் (33), பிரபாகரன் (36) மோகன லிங்கம் (34) ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story