போலீஸ் விசாரணைக்கு ஆஜரான முதியவர் கமிஷனர் அலுவலகத்தில் மயங்கி விழுந்து சாவு


போலீஸ் விசாரணைக்கு ஆஜரான முதியவர் கமிஷனர் அலுவலகத்தில் மயங்கி விழுந்து சாவு
x
தினத்தந்தி 23 Jun 2021 10:38 AM IST (Updated: 23 Jun 2021 10:38 AM IST)
t-max-icont-min-icon

சென்னை வில்லிவாக்கம், போலீஸ் விசாரணைக்கு ஆஜரான முதியவர் கமிஷனர் அலுவலகத்தில் மயங்கி விழுந்து விட்டார்.

சென்னை, 

சென்னை வில்லிவாக்கம், திருவீதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வேதாச்சலம் (வயது 60). கிரெடிட் கார்டு மோசடி வழக்கில் சிக்கிய இவரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணைக்கு அழைத்தனர்.

அதன்பேரில் வேதாச்சலம், நேற்று பகல் 11 மணி அளவில் கமிஷனர் அலுவலகத்தில் 2-வது மாடியில் செயல்படும் வங்கி மோசடி பிரிவு போலீசார் முன்னிலையில் ஆஜரானார். 2 மணி நேரம் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

பின்னர் மதிய உணவு சாப்பிட்டு விட்டு வந்தார். மீண்டும் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. மாலை 4 மணி அளவில் அவர் திடீரென்று விசாரணை அதிகாரி முன்னிலையில் மயங்கி விழுந்து விட்டார். அவரை உடனடியாக ஆட்டோவில் ஏற்றிச்சென்று ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

அங்கு அவர் பரிதாபமாக இறந்து போனார். இது தொடர்பாக உயர் அதிகாரிகள் மட்டத்தில் விசாரணை நடந்து வருகிறது. அவரது உடல் பொது மருத்துவமனை சவக்கிடங்கில் உள்ளது. பிரேத பரிசோதனை நடத்தப்படும் என்று தெரிகிறது.

Next Story