கோவில்பட்டி பஞ்சாயத்து யூனியன் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை


கோவில்பட்டி பஞ்சாயத்து யூனியன் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை
x
தினத்தந்தி 23 Jun 2021 7:13 PM IST (Updated: 23 Jun 2021 7:13 PM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டி அருகே நிலவும் சுகாதார சீர்கேட்டை கண்டித்தும், அடிப்படை வசதிகள் செய்துதரக்கோரியும் நேற்று கோவில்பட்டி பஞ்சாயத்து யூனியன் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

கோவில்பட்டி:
கோவில்பட்டி அருகே நிலவும் சுகாதார சீர்கேட்டை கண்டித்தும், அடிப்படை வசதிகள் செய்துதரக்கோரியும் நேற்று கோவில்பட்டி பஞ்சாயத்து யூனியன் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
யூனியன் அலுவலகம் முற்றுகை
கோவில்பட்டியை அருகேயுள்ள வடக்கு திட்டங்குளம் மாரியப்ப நாடார் காலனியில் வசிக்கும் மக்கள் நேற்று பரமசிவன் என்பவர் தலைமையில் கோவில்பட்டி யூனியன் அலுவலகத்துக்கு வந்தனர். தங்கள் பகுதியில் நிலவும் சுகாதார சீர்கேட்டை கண்டித்தும், உடனடியாக அந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதுடன் அடிப்படை வசதிகள் செய்து தர வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பியவாறு யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
கோரிக்கைகள்
அப்போது அவர்கள் கூறுகையில்,‘ எங்கள் பகுதியில் 150 குடியிருப்பு கள் உள்ளன. வாறுகால் கட்டப் படாததால் கழிவுநீர் தெருக்களில் தேங்கி சுகாதார கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. தெரு விளக்கு கிடையாது. இது பற்றி பலமுறை அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இப்பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும்’ என்றனர்.
பஞ்சாயத்து யூனியன் ஆணையாளர் பாலசுப்பிர மணியன் போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். விரைவில் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதாக அவர் உறுதியளித்ததை தொடர்ந்து கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
அதிகாரிகள் ஆய்வு
 பின்னர் ஆணையாளர் கள் பாலசுப்பிர மணியன், சீனிவாசன் ஆகியோர் திட்டங் குளம் கிராமத்தில் உள்ள மாரியப்ப நாடார் காலனிக்கு சென்று ஆய்வு நடத்தினர். பொதுமக்களின் கோரிக்கைப்படி, சுகாதார சீர்கேட்டை போக்குதல் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் விரைவாக நிறைவேற்றித் தரப்படும் என அவர்கள் உறுதி கூறினர்.

Next Story