தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் ஆர்ப்பாட்டம்


தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 23 Jun 2021 8:26 PM IST (Updated: 23 Jun 2021 8:26 PM IST)
t-max-icont-min-icon

தமிழ்ப்புலிகள் கட்சி நிர்வாகி கொலை செய்யப்பட்டதை கண்டித்து தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கம்பம்:

தமிழ்ப்புலிகள் கட்சியின் தேனி மேற்கு மாவட்ட செயலாளர் திருநாவுக்கரசு படுகொலை செய்யப்பட்டதை கண்டித்தும், பாதிக்கப்பட்ட குடும்பத்தை பாதுகாக்க வலியுறுத்தியும், தலித் அரசியல் தலைவர்கள் கொலை செய்யப்படுவதை தடுத்து நிறுத்தக்கோரியும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் கம்பம் காந்தி சிலை முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் மோகன் தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நகர செயலாளர் லெனின், இந்திய கம்யூனிஸ்டு கட்சி நகர செயலாளர் கல்யாணசுந்தரம், ஆதித்தமிழர் பேரவை நகர பொறுப்பாளர் குமரவேல், விவசாய சங்க மாவட்ட தலைவர் ஜெயராஜ், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் அண்ணாமலை, சிறுபான்மையினர் நலக்குழு மாவட்ட செயலாளர் நாகராஜன், ஜனநாயக வாலிபர் சங்க துணை செயலாளர் மணியரசன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Next Story