அரசு மருத்துவமனைக்கு ஆக்சிஜன் செறிவூட்டிகள்


அரசு மருத்துவமனைக்கு ஆக்சிஜன் செறிவூட்டிகள்
x
தினத்தந்தி 23 Jun 2021 9:08 PM IST (Updated: 23 Jun 2021 9:08 PM IST)
t-max-icont-min-icon

துபாயில் வசிக்கும் தமிழர்கள் வாட்ஸ்-அப் குழு மூலம் நிதி திரட்டி திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு ஆக்சிஜன் செறிவூட்டிகளை வழங்கினர்.

திண்டுக்கல்: 

கொரோனா வைரசின் 2-வது அலையின் பிடியில் சிக்கி தமிழகத்தில் ஏராளமானோர் பலியாகினர். இந்த வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் நுரையீரல் அதிகம் பாதிக்கப்பட்டதால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு ஆயிரக்கணக்கானோர் இறந்தனர். 

இதையடுத்து ஆக்சிஜன் படுக்கை வசதி கொண்ட வார்டுகள் அரசு, தனியார் மருத்துவமனைகளில் ஏற்படுத்தப்பட்டன. மேலும் வெளிநாடுகளில் இருந்து ஆக்சிஜன் கொண்டுவரப்பட்டு கொரோனா வார்டுகளில் பயன்படுத்தப்பட்டது.


அதேபோல் தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்களை சேர்ந்தவர்கள் ஆக்சிஜன் செறிவூட்டிகளை வாங்கி அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு வழங்கினர். 

அந்த வகையில் துபாயில் வசிக்கும் தமிழகத்தை சேர்ந்தவர்கள் ‘வாட்ஸ்-அப்’ குழு அமைத்து அந்த குழுவில் உள்ள உறுப்பினர்கள் மூலம் ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் நிதி திரட்டினர். 

பின்னர் அந்த நிதி மூலம் 5 லிட்டர் கொள்ளளவு கொண்ட 2 ஆக்சிஜன் செறிவூட்டிகளை வாங்கி திண்டுக்கல்லில் உள்ள தொண்டு நிறுவனம் மூலம் அரசு மருத்துவமனைக்கு, கண்காணிப்பாளர் சுரேஷ்பாபு முன்னிலையில் வழங்கப்பட்டது.

Next Story