தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா ஊரடங்கு விதிமுறைகளை மீறியவர்களிடம் ரூ.1¾ கோடி அபராதம் வசூல்

தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா ஊரடங்கு விதிமுறைகளை மீறியவர்களிடம்   ரூ.1¾ கோடி அபராதம் வசூல்
x
தினத்தந்தி 23 Jun 2021 3:55 PM GMT (Updated: 2021-06-23T21:25:38+05:30)

தூத்துக்குடி மாவட்டத்தில், இதுவரை கொரோனா ஊரடங்கு விதிமுறைகளை மீறியவர்களிடம் இருந்து ரூ.1¾ கோடி அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது.

தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில், இதுவரை கொரோனா ஊரடங்கு விதிமுறைகளை மீறியவர்களிடம் இருந்து ரூ.1¾ கோடி அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கொரோனா தடுப்பு நடவடிக்கை
தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக அமல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி கொரோனா ஊரடங்கு விதிமுறைகளை கடைபிடிக்காதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. 
அதன்படி இதுவரை முககவசம் அணியாமல் பொது இடங்களில் சென்றவர்களிடம் இருந்து ரூ.1 கோடியே 69 லட்சத்து 55 ஆயிரத்து 400 அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளது. அதே போன்று சமூக விலகலை கடைபிடிக்காதவர்களிடம் இருந்து ரூ.1 லட்சத்து 95 ஆயிரத்து 9 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளது. 
ரூ.1¾கோடி அபராதம்
இதே போன்று அதிக கூட்டம் கூடியதற்காகவும் பல்வேறு துறைகள் சார்பில் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. அதன்படி மாவட்டத்தில் இதுவரை ரூ.1 கோடியே 89 லட்சத்து 17 ஆயிரத்து 400 அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Next Story