திருவண்ணாமலை அருகே; குழந்தை திருமணம் தடுத்து நிறுத்தம்


திருவண்ணாமலை அருகே; குழந்தை திருமணம் தடுத்து நிறுத்தம்
x
தினத்தந்தி 23 Jun 2021 4:02 PM GMT (Updated: 2021-06-23T21:32:30+05:30)

திருவண்ணாமலை அருகே குழந்தை திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்ட காவல் அலுவலகத்தில் ‘ஹலோ திருவண்ணாமலை போலீஸ்’ என்ற சிறப்பு கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருகிறது. 

திருவண்ணாமலை தாலுகா மாயன்குளம் கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கு விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தாலுகா கணக்கன்குப்பம் திரவுபதி அம்மன் கோவிலில் வருகிற 28-ந் தேதி திருமணம் நடகக இருப்பதாக ‘ஹலோ திருவண்ணாமலை போலீஸ்’ கட்டுப்பாட்டு அறைக்கு ‘வாட்ஸ் அப்’ மூலம் தகவல் கிடைத்தது.

பெண்களுக்கு 18 வயது நிரம்பும் முன்னரே திருமணம் செய்வது குற்றமாகும். இந்த தகவலை தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பவன்குமார் அறிவுரையின்படி திருவண்ணாமலை டவுன் உதவி போலீஸ் சூப்பிரண்டு கிரண்ஸ்ருதி தலைமையிலான குழு சிறுமியை மீட்க அமைக்கப்பட்டது. 

அதே நேரத்தில் சமூக நலத்துறைக்கும் இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது. 

அதன்படி ஊரக நலத்துறை அலுவலர் (பெண்கள்) மற்றும் குழந்தைகள் உதவி மைய உறுப்பினர், திருவண்ணாமலை தாலுகா போலீசார் ஆகியோர் மாயன்குளம் கிராமத்திற்கு விைரந்தனர். 

அவர்கள் 17 வயது சிறுமியின் திருமணத்தை தடுதது அநத சிறுமியை மீட்டு திருவண்ணாமலை, பெரும்பாக்கம் சாலையில் உள்ள குழந்தைகள் பராமரிப்பு இல்லத்தில் ஒப்படைத்தனர்.

Next Story