தூத்துக்குடியில் தமிழ் புலிகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


தூத்துக்குடியில் தமிழ் புலிகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 23 Jun 2021 9:36 PM IST (Updated: 23 Jun 2021 9:36 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் மாவட்ட தமிழ்ப்புலிகள் கட்சி சார்பில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று காலையில் ஆர்ப்பாட்டம் நடந்தது

தூத்துக்குடி:
தூத்துக்குடியில் மாவட்ட தமிழ்ப்புலிகள் கட்சி சார்பில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று காலையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் தாசு தலைமை தாங்கினார்.
ஆர்ப்பாட்டத்தில் தேனி மேற்கு மாவட்ட துணை செயலாளர் திருநாவுக்கரசை கொலை செய்தவர்கள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும், பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில் கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர். பின்னர் கோரிக்கையை வலியுறுத்தி மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) அமுதாவிடம் மனு கொடுத்தனர்.

Next Story