27 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்


27 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 23 Jun 2021 10:26 PM IST (Updated: 23 Jun 2021 10:26 PM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல்லில் கடையில் பதுக்கி வைத்திருந்த 27 கிலோ புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

திண்டுக்கல்: 

திண்டுக்கல் மேற்கு ரதவீதியில் இனிப்பு, பிளாஸ்டிக் தட்டுகள் விற்கும் ஒரு கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் சூப்பிரண்டின் தனிப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாரிமுத்து தலைமையிலான போலீசார் அந்த கடையில் அதிரடியாக புகுந்து சோதனை நடத்தினர். 

அப்போது அந்த கடையில் 27 கிலோ புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். இதையடுத்து கடையின் உரிமையாளரான கோவிந்தாபுரத்தை சேர்ந்த தீபாராம் (வயது 35) என்பவரை பிடித்து போலீசார் விசாரித்தனர். 

அதில் புகையிலை பொருட்களை கடையில் பதுக்கி வைத்து விற்றது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து தீபாராம் மற்றும் 27 கிலோ புகையிலை பொருட்களை திண்டுக்கல் வடக்கு போலீஸ் நிலையத்தில் தனிப்படை போலீசார் ஒப்படைத்தனர். அதன்பேரில் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து தீபாராமை கைது செய்தனர்.

Next Story