புதிய டிரான்ஸ்பார்மர்
வெள்ளையபுரம் ஊராட்சியில் புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டது.
தொண்டி,
திருவாடானை தாலுகா, வெள்ளையபுரம் ஊராட்சியில் மின் பற்றாக்குறையை சரி செய்ய கூடுதல் டிரான்ஸ்பார்மர் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். அதன் அடிப்படையில் வெள்ளையபுரம் ஊராட்சி தலைவர் பரக்கத்தலி மற்றும் ஜமாத் நிர்வா கத்தின் தொடர் முயற்சியால் புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்கும் பணி மின்வாரிய ஊழியர்களின் ஒத்துழைப்புடன் துரிதமாக மேற் கொள்ளப் பட்டது. அதனை தொடர்ந்து புதிய டிரான்ஸ்பார்மர் பொது மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் உதவி செயற் பொறியாளர் ஜோசப் செல்வராஜ், உதவி பொறியாளர் கார்மேகம், வணிக ஆய்வாளர் ஜெயகார்த்திக், ஊராட்சி தலைவர் பரக்கத்தலி, ஜமாத் தலைவர் ஹச்புல்லா, துணைச்செயலாளர்அப்துல் காதர், முன்னாள் ஊராட்சி தலைவர் பரக்கத்அலி, மின் வாரிய அலுவ லர்கள் நாகேந்திரன், தாமஸ் சார்லஸ் ஜூடு, ஊராட்சி உறுப்பினர்கள் சகாருதீன், அப்துல் சமத், அகமதுகனி, முகமது சாதிக், நூர்தீன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story