திட்டக்குடி அருகே குடிநீர் ஆலையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலைமறியல்
திட்டக்குடி அருகே குடிநீர் ஆலையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனா்.
திட்டக்குடி,
திட்டக்குடி அருகே இடைச்செருவாய் கிராமத்தில் தனியார் குடிநீர் ஆலை ஒன்று அமைக்கப்பட்டு வருகிறது. இதை திறக்க எதிர்ப்பு தெரிவித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நேற்று அப்பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுபற்றி தகவல் அறிந்த திட்டக்குடி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, தங்கள் பகுதியில் குடிநீர் ஆலை திறக்கப்பட்டால், நிலத்தடி நீர் பாதிக்கப்படும் எனவே ஆலையை திறக்க கூடாது என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
இந்த பிரச்சினை குறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்தனர். இதையடுத்து அனைவரும் அமைதியாக கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story