கடலூர் முதுநகரில் மளிகை கடையில் தீவிபத்து ரூ.3 லட்சம் பொருட்கள் சேதம்


கடலூர் முதுநகரில் மளிகை கடையில் தீவிபத்து  ரூ.3 லட்சம் பொருட்கள் சேதம்
x
தினத்தந்தி 23 Jun 2021 5:24 PM GMT (Updated: 2021-06-23T22:54:49+05:30)

கடலூர் முதுநகரில் மளிகை கடையில் தீவிபத்து ஏற்பட்டது. இதில் ரூ.3 லட்சம் பொருட்கள் சேதமடைந்தன.

கடலூர் முதுநகர், 

கடலூர் முதுநகர் சாலக்கரை பகுதியில் பால்ராஜ் (வயது 45) என்பவர் மளிகை கடை நடத்தி வருகிறார். கடைக்கு பின்புறம் அவரது வீடு உள்ளது. இந்த நிலையில் நேற்று மதியம் அவரது கடையில் தீ விபத்து ஏற்பட்டது. உடனே அவர் தீயை அணைக்க முயன்றாா். 

இதற்கிடையே இதுபற்றி தகவல் அறிந்த கடலூர் சிப்காட் தீயணைப்பு நிலைய  அலுவலர் வீரபாகு தலைமையிலான, தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இருப்பினும் கடையில் இருந்த பணம் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் எரிந்து சேதமானது. 

இதன் சேதமதிப்பு ரூ. 3 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து கடலூர் முதுநகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story