ஆதிச்சபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாவட்ட ஊராட்சி தலைவர் ஆய்வு


ஆதிச்சபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாவட்ட ஊராட்சி தலைவர் ஆய்வு
x
தினத்தந்தி 23 Jun 2021 5:54 PM GMT (Updated: 23 Jun 2021 5:54 PM GMT)

ஆதிச்சபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாவட்ட ஊராட்சி தலைவர் ஆய்வு.

கோட்டூர்,

கோட்டூர் அருகே உள்ள ஆதிச்சபுரம் ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் மாநில சமச்சீர் வளர்ச்சி நிதியில் ரூ. 2 கோடியில் கட்டப்பட்டு வரும் கட்டிடத்தை திருவாரூர் மாவட்ட ஊராட்சித் தலைவர் தலையாமங்கலம் பாலு நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். கட்டிடபணிகளை ஆய்வு செய்த அவர் விரைந்து பணிகளை முடிக்க அதிகாரிகளுக்குஅறிவுரை வழங்கினார். மேலும் ஆதிச்சபுரம் ஆரம்ப சுகாதார நிலைய பகுதியில் உள்ள அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி விரைந்து செலுத்த வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் அன்பரசனிடம் அறிவுறுத்தினார். அப்போது டாக்டர்கள் மருத்துவமனை வளாகத்தில் ஆம்புலன்ஸ் நிறுத்துமிடம் கட்டித்தர வேண்டும் என கேட்டுக்கொண்டனர். அப்போது ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர்கள் மற்றும் பணியாளர்களுக்கு முகக்கவசம் மற்றும் கையுறை களை மாவட்டஊராட்சித்தலைவர் வழங்கினார். ஆய்வின்போது கோட்டூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் மணிமேகலைமுருகேசன், தி.மு.க ஒன்றிய செயலாளர் பாலஞானவேல், ஒன்றியக்குழு துணை தலைவர் விமலாரவிச்சந்திரன், ஊராட்சி தலைவர் அமுதா முருகையன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் டாக்டர்கள் கலந்து கொண்டனர்.

Next Story