தமிழக ஆந்திர எல்லையில் டிரோன் கேமராவால் சாராயம் காய்ச்சும் இடங்கள் கண்டுபிடிப்பு
வாணியம்பாடி அருகே தமிழக-ஆந்திர எல்லையில் போலீஸ் சூப்பிரண்டு தலைமையிலான போலீசார் டிரோன் கேமரா மூலமாக சாராயம் காய்ச்சும் இடங்களை கண்டு பிடித்தனர்.
வாணியம்பாடி
வாணியம்பாடி அருகே தமிழக-ஆந்திர எல்லையில் போலீஸ் சூப்பிரண்டு தலைமையிலான போலீசார் டிரோன் கேமரா மூலமாக சாராயம் காய்ச்சும் இடங்களை கண்டு பிடித்தனர்.
போலீஸ் சூப்பிரண்டு களத்தில் இறங்கினார்
சாராயம்
திருப்பத்தூர் மாவட்டத்தில் சாராயம் காய்ச்சுவதை தடுத்தல், வெளிமாநில மதுபானக் கடத்தலை தடுத்தல் போன்ற நடவடிக்கையில் போலீஸ் சூப்பிரண்டு சிபி சக்கரவர்த்தி நேரில் களத்தில் இறங்கி உள்ளார்.
அதன்படி தமிழக-ஆந்திர எல்லையில் மாதகடப்பா, தாமரைகுளம், வீரணமலை ஆகிய பகுதிகளையொட்டி சிலர் சாராயம் காய்ச்சுவதாக கிடைத்த தகவலின்பேரில் போலீஸ் சூப்பிரண்டு மற்றும் போலீஸ் குழுவினருடன் சம்பவ இடங்களுக்கு நேரில் சென்றார். அங்கு, டிரோன் கேமரா மூலம் எந்தெந்தப் பகுதிகளில் சாராயம் காய்ச்சப்படுகிறது, எனக் கண்காணித்தார். ஊறல்கள் இருக்கும் இடங்களை கண்டறிந்தார்.
உடைக்கப்பட்டன
ஓரிடத்தில் 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட கேன்களில் வைத்திருந்த ஊறலை பறிமுதல் செய்து அழித்தார். மேலும் சாராயம் காய்ச்ச தயாராக வைத்திருந்த 3 ஆயிரம் லிட்டர் ஊறலை பறிமுதல் செய்து அழித்தார். சாராயம் காய்ச்சும் அடுப்புகள் அடித்து உடைக்கப்பட்டன. இந்த நடவடிக்கையின்போது துணை போலீஸ் சூப்பிரண்டு பழனிசெல்வம் உள்பட 20-க்கும் மேற்பட்ட போலீசார் உடன் சென்றனர்.
மேலும் சாராயம் காய்ச்சுவோர் காட்டுப்பகுதியில் தங்கியிருக்கும் இடங்களுக்கு கழுதைகள் மூலம் சாராயம் காய்ச்ச பயன்படுத்தப்படும் வெல்லம், மூலப் பொருட்கள் எடுத்துச் சென்றதைப் போலீசார் கண்டுபிடித்தனர். 8 கழுதைகளை போலீசார் பிடித்து, ஒரு மினி லாரியில் ஏற்றி வந்தனர்.
முழுமையாக ஒழிக்க வேண்டும்
தமிழக-ஆந்திர எல்லையில் தகரகுப்பம், தரக்காடு, பூதமலை, காந்திநகர் பகுதியிலும், ஆலங்காயம் போலீஸ் எல்லைக்குட்பட்ட பீமகுளம், பூங்குளம், பலப்பல்நத்தம் ஆகிய பகுதிகளிலும் சாராயம் காய்ச்சப்படுகிறது. மேலும் வாணியம்பாடியில் உடனடி சாராய பாக்கெட்டுகள் தயாரிக்கும் நிறுவனத்தை முழுமையாக ஒழிக்க வேண்டும், எனப் பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
Related Tags :
Next Story