நாமக்கல் மாவட்டத்தில்269 பேருக்கு கொரோனா-தொற்று பாதித்த 4 பேர் பலி
நாமக்கல் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் மேலும் 269 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. அதே நேரத்தில் 4 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.
நாமக்கல்,
தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பின்படி நேற்று முன்தினம் வரை நாமக்கல் மாவட்டத்தில் 42 ஆயிரத்து 995 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இதற்கிடையே பிற மாவட்டத்தில் சிகிச்சை பெற்று வந்த ஒருவரின் பெயர் நாமக்கல் மாவட்ட பட்டியலுடன் இணைக்கப்பட்டது. இதனால் நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 42 ஆயிரத்து 996 ஆக அதிகரித்தது.
இந்தநிலையில் நேற்று ஒரே நாளில் மேலும் 269 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. இதனால் மாவட்டத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 43 ஆயிரத்து 265 ஆக அதிகரித்து உள்ளது.
இதற்கிடையே நேற்று கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 278 பேர் குணமாகி வீடு திரும்பினர். இதுவரை 40 ஆயிரத்து 630 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். 2 ஆயிரத்து 242 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
நாமக்கல் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை கொரோனாவுக்கு 389 பேர் பலியாகி இருந்தனர். இந்தநிலையில் நேற்று அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வந்த எருமப்பட்டி, குமாரபாளையம், நாமக்கல் ஆகிய பகுதிகளை சேர்ந்த 4 பேர் சிகிச்சை பலனின்றி பலியாகினர். இதனால் கொரோனாவுக்கு பலியான நபர்களின் எண்ணிக்கை 393 ஆக அதிகரித்து உள்ளது.
Related Tags :
Next Story