தென்னை மரம் ஏறிய தொழிலாளி மின்சாரம் பாய்ந்து பலி


தென்னை மரம் ஏறிய தொழிலாளி மின்சாரம் பாய்ந்து பலி
x
தினத்தந்தி 24 Jun 2021 12:39 AM IST (Updated: 24 Jun 2021 12:39 AM IST)
t-max-icont-min-icon

தென்னை மரம் ஏறிய தொழிலாளி மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக இறந்தார்.

நொய்யல்
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே சுண்ணாம்பட்டியை சேர்ந்தவர் ராஜூ (வயது 57). மரம் ஏறும் கூலி தொழிலாளி. இவர் நேற்று காலை கரூர் மாவட்டம், ஒரம்புப்பாளையம் செல்லும் சாலையில் உள்ள ஒரு தென்னந்தோப்பிற்கு தேங்காய் பறிப்பதற்காக தொழிலாளர்களுடன் வந்துள்ளார். பின்னர் ஒரு தென்னை மரத்தில் தேங்காய்கள் பறிப்பதற்காக ராஜூ ஏறியுள்ளர். அப்போது தென்னைமரத்தின் அருகே சென்று கொண்டிருந்த உயர் மின்அழுத்த மின் கம்பியில் ராஜூயின் உடல் பட்டுள்ளது. இதில் அவர் மீது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த வேலாயுதம்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ராஜூயின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்த புகாரின்பேரில், போலீஸ் இன்ஸ்பெக்டர் சிதம்பரபாரதி வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Tags :
Next Story