கஞ்சா விற்ற 3 பேர் கைது


கஞ்சா விற்ற 3 பேர் கைது
x
தினத்தந்தி 23 Jun 2021 7:12 PM GMT (Updated: 2021-06-24T00:42:19+05:30)

கஞ்சா விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

நொய்யல்
நொய்யல் அருகே உள்ள கீழ்ஒரத்தைப் பகுதியில் கஞ்சா பொட்டல்கள் வைத்து விற்பனை செய்யப்படுவதாக வந்த தகவலின்பேரில், வேலாயுதம்பாளையம் போலீசார் அப்பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது, ஒரு வீட்டில் வைத்து கஞ்சா விற்ற அதே பகுதியை சேர்ந்த ரூபன்குமார் (வயது 24), கரூர் பசுபதிபாளையம் வடக்குத்தெரு 3-வது கிராஸ் ஏ.வி.பி.. நகர் பகுதியை சேர்ந்த சம்பத்குமார் (26), உப்பிடமங்கலம் ஜோதிவடம் ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்த மோகன்ராஜ் (28) ஆகியோரை செய்தனர். மேலும் விற்பனைக்காக வைத்திருந்த 15 கிராம் எடையுள்ள 6 கஞ்சா பொட்டல்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

Next Story