பணியின்போது உயிரிழந்த போலீஸ்காரரின் பெற்றோருக்கு ரூ.20 லட்சம் நிதியுதவி
பணியின்போது உயிரிழந்த போலீஸ்காரரின் பெற்றோருக்கு ரூ.20 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டது
தாமரைக்குளம்
அரியலூர் மாவட்டம் திருமானூர் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றிவர் மகாலிங்கம். புற்று நோயால் பாதிக்கப்பட்ட இவர் கடந்த ஏப்ரல் மாதம் உயிரிழந்தார். அவரது குடும்பத்தினருக்கு உதவ அவருடன் 2011-ம் ஆண்டு தமிழ்நாடு காவல் துறையில் பணியில் சேர்ந்த போலீசார் முடிவு செய்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து சக போலீசாரிடம் பேசி `காக்கி உதவும் கரங்கள்' சார்பாக ரூ.20 லட்சம் நிதி திரட்டினர். அந்தப் பணத்தை நிரந்தர வைப்பு தொகையாக வங்கியில் டெபாசிட் செய்தனர். பின்னர் அந்த வைப்புத் தொகைக்கான ஆவணம் மற்றும் ரூ.7,500 ரொக்கம் ஆகியவற்றை அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா, போலீஸ்காரர் மகாலிங்கம் பெற்றோர்களான வரதராஜன்-தமயந்தியிடம் வழங்கினார். அப்போது மகாலிங்கத்துடன் பணியாற்றிய போலீசார் உடனிருந்தனர்.

Related Tags :
Next Story