அரியலூரில் கொரோனாவுக்கு 2 பேர் பலி
அரியலூரில் கொரோனாவுக்கு 2 பேர் பலியாகினர்
அரியலூர்
அரியலூர் மாவட்டத்தில் நேற்று 67 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இந்தநிலையில் கொரோனாவால் ஏற்கனவே பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 63 வயது மற்றும் 55 வயதுடைய ஆண்கள் 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால் மாவட்டத்தில் பலியானோர் எண்ணிக்கை 196 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 43 பேர் கொரோனாவில் குணமாகி மருத்துவமனைகளில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர். தற்போதைய நிலவரப்படி 567 பேர் கொரோனாவுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் 889 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டியவுள்ளது. மாவட்டத்தில் நேற்று மட்டும் 2,357 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

Related Tags :
Next Story