பெரம்பலூரில் கொரோனாவுக்கு ஒருவர் பலி


பெரம்பலூரில் கொரோனாவுக்கு ஒருவர் பலி
x
தினத்தந்தி 24 Jun 2021 2:02 AM IST (Updated: 24 Jun 2021 2:02 AM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூரில் கொரோனாவுக்கு ஒருவர் பலியானார

பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்றைய நிலவரப்படி பெரம்பலூர் ஒன்றியத்தில் 14 பேர், வேப்பந்தட்டை ஒன்றியத்தில் 12 பேர், வேப்பூர் ஒன்றியத்தில் 8 பேர், ஆலத்தூர் ஒன்றியத்தில் 10 பேர் என மொத்தம் 44 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்தநிலையில் கொரோனாவிற்கு நேற்று ஒருவர் உயிரிழந்தார். இதன்மூலம் பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு பலியானோர் எண்ணிக்கை 190 ஆக உயர்ந்துள்ளது.


Next Story