மானூரில் ஜமாபந்தியை தொடங்கி வைத்த கலெக்டர்


மானூரில் ஜமாபந்தியை தொடங்கி வைத்த கலெக்டர்
x
தினத்தந்தி 24 Jun 2021 2:14 AM IST (Updated: 24 Jun 2021 2:14 AM IST)
t-max-icont-min-icon

மானூர் தாலுகாவில் ஜமாபந்தியை கலெக்டர் விஷ்ணு நேற்று தொடங்கி வைத்தார்.

நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் ஆண்டுக்கு ஒரு முறை வருவாய் தீர்வாயம் அதாவது ஜமாபந்தி கிராம நிர்வாக அலுவலகத்தில் உள்ள வரவு செலவு கணக்குகள், பதிவேடுகள் ஆய்வு செய்து தணிக்கை செய்யப்படும். மேலும் பட்டா மாற்றம் செய்தல், தனிப்பட்டா வழங்குதல் உள்ளிட்ட வருவாய்த்துறை சம்பந்தமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இந்த ஜமாபந்தி நெல்லை மாவட்டத்தில் நேற்று தொடங்கியது. கொரோனா அச்சறுத்தல் காரணமாக இணையதளத்தின் மூலம் ஏராளமானோர் கோரிக்கை மனுக்களை வழங்கினார்கள்.

மானூர் தாலுகா ஜமாபந்தி அதிகாரியாக கலெக்டர் விஷ்ணு நியமிக்கப்பட்டார். அவர் நேற்று மானூர் தாலுகா அலுவலகத்திற்கு சென்று ஜமாபந்தியை தொடங்கி வைத்து வருவாய் தீர்வாயம் கணக்குகளை ஆய்வு செய்தார். அப்போது பலர் பட்டா மாற்றம், முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை கேட்டு மனு கொடுத்தனர். இந்த மனுக்கள் மீது உடனடியாக பரிசீலனை செய்து தீர்வு காணப்பட்டது.

இதைத்தொடர்ந்து 5 பேருக்கு வீட்டுமனை பட்டா, 2 பேருக்கு பட்டா மாறுதல், 5 மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டன. இதற்கான ஆணைகளை கலெக்டர் விஷ்ணு வழங்கினார். இந்த ஜமாபந்தியில் வேளாண்மை துறை இணை இயக்குனர் கஜேந்திர பாண்டியன், நில அளவை உதவி இயக்குனர் வாசுதேவன், மானூர் தாசில்தார் ராஜேந்திரன், கலெக்டர் அலுவலக குற்றப்பிரிவு தாசில்தார் தங்கராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story