பாளையங்கோட்டை சித்த மருத்துவமனையில் புறநோயாளிகள் பிரிவு செயல்பட தொடங்கியது


பாளையங்கோட்டை சித்த மருத்துவமனையில் புறநோயாளிகள் பிரிவு செயல்பட தொடங்கியது
x
தினத்தந்தி 24 Jun 2021 2:31 AM IST (Updated: 24 Jun 2021 2:31 AM IST)
t-max-icont-min-icon

பாளையங்கோட்டை சித்த மருத்துவமனையில் புறநோயாளிகள் பிரிவு நேற்று முதல் செயல்பட தொடங்கியது.

நெல்லை:
கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. மேலும் கொரோனாவை கட்டுப்படுத்த அரசு ஆஸ்பத்திரிகளில் சிறப்பு சிகிச்சை மையம் அமைக்கப்பட்டது. நெல்லை அரசு சித்த மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தனியாக சிறப்பு வார்டு அமைக்கப்பட்டு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் அங்கு சிகிச்சை பெற்று வந்த அனைத்து நோயாளிகளும் கடந்த சில நாட்களுக்கு முன்பு குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால் ஆஸ்பத்திரி வளாகம் காலியாக இருந்தது.

இதையடுத்து அங்கு வழக்கமான சித்த மருத்துவ சிகிச்சையை தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. 12 புற நோயாளிகள் பிரிவு தொடங்கவும், உள்நோயாளிகளை அனுமதிக்கவும் ஏற்பாடு நடந்தது. இதைத்தொடர்ந்து ஆஸ்பத்திரி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு படுக்கைகள் சுத்தம் செய்யப்பட்டு நேற்று முதல் புறநோயாளிகள் பிரிவு செயல்பட தொடங்கியது. 

நேற்று நோயாளிகள் ஆஸ்பத்திரிக்கு வந்து சிகிச்சை பெற்றனர். பின்னர் நீண்ட வரிசையில் நின்று மருந்து வாங்கி சென்றனர். ஆஸ்பத்திரி வளாகத்தில் அனைவருக்கும் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.  நாளை (வெள்ளிக்கிழமை) முதல் அனைத்து பிரிவுகளும் செயல்படும் என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.

Next Story