இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆலோசனை கூட்டம்


இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆலோசனை கூட்டம்
x
தினத்தந்தி 24 Jun 2021 2:50 AM IST (Updated: 24 Jun 2021 2:50 AM IST)
t-max-icont-min-icon

கடையநல்லூரில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

அச்சன்புதூர்:
கடையநல்லூரில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆலோசனை கூட்டம் அலுவலகத்தில் நடைபெற்றது. நகர தலைவர் செய்யது மசூது தலைமை தாங்கினார். மாநில துணை தலைவர் கோதர்மைதீன், அமைப்பு செயலாளர் நெல்லை மஜீத், மாநில துணைச்செயலாளர் இப்ராஹிம் மக்கி, மாவட்ட தலைவர்கள் செய்யது சுலைமான் (தென்காசி), மீரான் மைதீன் (நெல்லை), மாவட்ட செயலாளர் இக்பால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச் செயலாளர் முகம்மது அபூபக்கர் கலந்து கொண்டார்.

பின்னர் அவர் கூறுகையில், ‘குடியுரிமை சட்டத்தை எதிர்த்து தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடத்தப்பட்டன. அப்போது போடப்பட்ட வழக்குகள் அனைத்தையும் தமிழக அரசு வாபஸ் பெற வேண்டும். இந்த சட்டத்தை எதிர்த்து கேரளாவை போன்று தமிழக சட்டசபையிலும் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். 2011-ம் ஆண்டு தமிழக முதல்-அமைச்சராக தி.மு.க. தலைவர் கருணாநிதி இருந்தபோது சிறுபான்மை சமுதாயம் சார்பில் நடத்தப்படும் சுயநிதி கல்வி நிறுவனங்களுக்கு 12-ம் வகுப்பு வரை உள்ள பள்ளிக்கூடங்களுக்கு அங்கே பணியாற்றும் ஆசிரியர்களுக்கு அதற்கான ஊதியத்தை அரசே வழங்கும் என ஆணை பிறப்பித்தார். அந்த ஆணை எதிர்க்கட்சிகளால் கடந்த 10 ஆண்டுகளாக நிறைவேற்றப்படாமல் கிடப்பில் உள்ளது. அந்த ஆணையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்ற வேண்டும்’ என்றார். கூட்டத்தில் நகர செயலாளர் அய்யூப்கான், பொருளாளர் திவான் மைதீன், மாநில இளைஞரணி தலைவர் நவாஸ்கான் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Next Story