இணையவழியில் யோகாசன போட்டி
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இணையவழியில் தேசிய அளவிலான யோகாசனப்போட்டி நடந்தது.
கடையம்:
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இணையவழியில் நடந்த தேசிய அளவிலான யோகாசனப்போட்டியில் புதுடெல்லி இந்தியன் யோகா சங்கம், தமிழ்நாடு யோகா கூட்டமைப்பு, யோகா ஆசிரியர் அறிவியல் சிகிச்சை மற்றும் சென்னை மீனாட்சி மேல்படிப்பு ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவை சார்பாக நாடு முழுவதும் 1,000 நபர்கள் ஒரே நேரத்தில் 90 வினாடிகள் உடல் அசைவு இல்லாமல் வீரபத்திராசனத்தில் நின்று நோபல் உலக சாதனை முயற்சியில் ஈடுபட்டனர். மீனாட்சி ஆராய்ச்சி நிறுவன முதுநிலை கல்வி அறிஞர் காமாட்சி, பேராசிரியர் இளங்கோவன் மற்றும் நோபல் உலக சாதனை சர்வதேச இயக்குனரும், தமிழ்நாடு யோகா கூட்டமைப்பு இணைச்செயலாளருமான அரவிந்த் லட்சுமி நாராயணன் ஆகியோர் வரவேற்றனர். பேராசிரியர்கள் முருகேசன், சுப்புலட்சுமி ஆகியோர் வாழ்த்தி பேசினர். முதுகலை கல்வி அறிஞர் விஜயகுமாரி நன்றி கூறினார்.
ரவணசமுத்திரத்தில் நடந்த போட்டியில் குற்றாலம் செய்யது பள்ளி குழுமத்தின் 3-ம் வகுப்பு மாணவி சாஜிதா ஸைனப், 10-ம் வகுப்பு மாணவி மிஸ்பா நூருல் ஹபிபா ஆகியோர் சமூக இடைவெளிவிட்டு வீரபத்திராசனத்தில் 90 வினாடிகள் உடல் அசைவு இல்லாமல் நின்று அசத்தினர். இவ்விரு மாணவிகளையும் பள்ளித்தலைவர் பத்ஹூர் ரப்பானி, பள்ளி இயக்குனர் செய்யது நவாஸ், முதல்வர் முகைதீன் அப்துல் காதர், தலைமை ஆசிரியை நசீம் பானு, யோகா ஆசிரியர் குரு கண்ணன், உடற்கல்வி இயக்குனர் சுப்பிரமணியன் மற்றும் ஆசிரிய-ஆசிரியைகள், அலுவலக பணியாளர்கள் பாராட்டினர்.
Related Tags :
Next Story