மண் கடத்தி கலெக்டரிடம் பிடிபட்ட லாரி டிரைவர், கிளீனர் கைது


மண் கடத்தி கலெக்டரிடம் பிடிபட்ட லாரி டிரைவர், கிளீனர் கைது
x
தினத்தந்தி 24 Jun 2021 6:14 AM IST (Updated: 24 Jun 2021 6:15 AM IST)
t-max-icont-min-icon

மண் கடத்தி கலெக்டரிடம் பிடிபட்ட லாரி டிரைவர், கிளீனர் கைது செய்தனர்.

சேந்தமங்கலம்,

நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் நேற்று முன்தினம் கொல்லிமலையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் இரவில் சேந்தமங்கலம் வழியாக முகாம் அலுவலகத்திற்கு திரும்பி கொண்டிருந்தார். வழியில் ராமநாதபுரம்புதூர் கிராமம் அருகில் மண் லோடுடன் லாரி ஒன்று சென்றது. இதனை பார்த்த கலெக்டர் ஸ்ரேயாசிங் அந்த லாரியை மடக்கி பிடித்து, அதிலிருந்த 2 பேரிடம் விசாரித்தார். 

அதில் அவர்கள் நாச்சிபுதூரை சேர்ந்த டிரைவர் குமரேசன் (வயது 26), விழுப்புரம் மாவட்டம் கண்ணாச்சிபுரத்தை சேர்ந்த கிளீனர் பூவரசன் (21) என்பதும், லாரியில் மண் கடத்தி சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து கலெக்டர் அவர்கள் 2 பேர் மீதும் நடவடிக்கை எடுக்க சேந்தமங்கலம் போலீசாருக்கு உத்தரவிட்டார். அவரது உத்தரவின்பேரில் போலீசார் குமரேசன், பூவரசன் மீது வழக்குப்பதிவு செய்து, அவர்களை கைது செய்தனர்.

Next Story