திருச்சியில் வெப்பத்தை தணித்த மழை
திருச்சியில் பெய்த மழை வெப்பத்தை தணித்தது.
திருச்சி,
திருச்சியில் பெய்த மழை வெப்பத்தை தணித்தது.
திடீர் மழை
திருச்சியில் அக்னி நட்சத்திரம் கடந்த மே மாத இறுதியில் முடிவடைந்து விட்டாலும் வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்தபடியே இருந்தது. அவ்வப்போது காற்று பலமாக வீசியதால் வெப்பத்தின் தாக்கம் அதிக அளவில் இல்லை என்றாலும் மக்கள் சுட்டெரித்த வெயிலால் கடும் அவதிப்பட்டு வந்தனர்.
இந்தநிலையில் நேற்று அதிகாலை லேசாக மழை தூறியது. தொடர்ந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அதன் பின்னர் வெயில் சுட்டெரித்தது. மாலை 4.30 மணி அளவில் திடீரென சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது.
தணிந்த வெப்பம்
சுமார் ஒரு மணி நேரம் நீடித்த இந்த மழையினால் திருச்சி நகரில் பல இடங்களில் சாலைகளில் தண்ணீர் தேங்கியது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றது. இரவு 7 மணிக்கு மேல் மீண்டும் சிறிது நேரம் மழை பெய்தது.இந்த திடீர் மழை திருச்சியில் கடந்த சில நாட்களாக நிலவிய வெப்பத்தை ஓரளவு தணித்தது. இரவு முழுவதும் இதமான காற்று வீசியதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
துவரங்குறிச்சி
இதுபோல் துவரங்குறிச்சி மற்றும் வளநாடு பகுதிகளில் சமீப காலமாக வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வந்தது அனல் காற்றும் வீசப்பட்டது இந்நிலையில் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகினர் நேற்று இரவு துவரங்குறிச்சி மற்றும் வளநாடு பகுதியில் ஓரிரு இடங்களில் அதிக காற்றுடன் கூடிய மின்னலுடன் சிறிது நேரம் சாரல் மழையும் சிறிது நேரம் மழை அதிகரிக்க தொடங்கி கொட்டி தீர்த்தது. இதனால் சாலைகளிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது வீடுகளிலும் மழைநீர் புகுந்தது.
Related Tags :
Next Story