புதுப்பொலிவுடன் ஊத்துக்கோட்டை போலீஸ் நிலையம்
ஊத்துக்கோட்டை, புதுப்பொலிவுடன் ஊத்துக்கோட்டை போலீஸ் நிலையம் கட்டப்பட்டது.
ஊத்துக்கோட்டை,
ஊத்துக்கோட்டை நகரம் தமிழக எல்லையில் உள்ளது. இங்கு 1953-ம் ஆண்டு போலீஸ் நிலையம் தொடங்கப்பட்டது. போலீஸ் நிலைய கட்டிடம் பழுதடைந்ததை கருத்தில் கொண்டு 2017-ம் ஆண்டு ரூ.63 லட்சத்து 25 ஆயிரம் செலவில் புதிய போலீஸ் நிலையம் கட்டப்பட்டது. 2 மாடிகள் கொண்ட இந்த போலீஸ் நிலையத்தில் ஒரு இன்ஸ்பெக்டர், 2 சப்-இன்ஸ்பெக்டர்கள், 40 போலீசார் பணிபுரிந்து வருகின்றனர். சில மாதங்களுக்கு முன் போலீஸ் இன்ஸ்பெக்டராக பொறுப்பேற்று கொண்ட குமார் எடுத்து கொண்ட முயற்சி காரணமாக போலீஸ் நிலையம் தற்போது புதுப்பொலிவுடன் காட்சியளிக்கிறது. போலீஸ் நிலையம் முழுவதும் வர்ணம் பூசப்பட்டுள்ளது. போலீஸ் நிலையம் எதிரே இருந்த காலி மனையில் வண்ண வண்ண மலர்கள் மற்றும் மூலிகை செடிகள் வளர்ப்பதால் போலீஸ் நிலைய வளாகம் பூங்கா போல் காட்சியளிக்கிறது. புகார் கொடுக்க வருபவர்கள் அமர ஆங்காங்கே சிமெண்டு பலகைகளால் ஆன நாற்காலிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
வண்ண வண்ண மீன்கள் வளர்க்கப்படுகிறது. மேலும் புகார் கொடுக்க வருபவர்களிடம் மென்மையாக நடந்துகொள்ள வேண்டும் என்று போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார் போலீசாருக்கு அடிக்கடி அறிவுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. புகார் மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுத்து தீர்வு கண்டு வருகிறார்.
Related Tags :
Next Story