மின்வாரிய ஒப்பந்த ஊழியர்கள் போராட்டம்
சேலையூர் அருகே மின் பராமரிப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது மின்கம்பத்தில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்தார்.
தாம்பரம்,
சென்னையை அடுத்த தாம்பரம் மின்கோட்டத்துக்கு உட்பட்ட சேலையூர் துணை மின் நிலையத்தில் ஒப்பந்த ஊழியராக பணிபுரிந்தவர் கணேஷ் (வயது 34). இவர், சேலையூர் அருகே மின் பராமரிப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது மின்கம்பத்தில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்தார்.
அவரது குடும்பத்துக்கு நிவாரணம் வழங்க கோரி ஒப்பந்த ஊழியர்கள் தாம்பரம் மின்கோட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தனர். ஆனால் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் இதுகுறித்து முதல்-அமைச்சர் தனிப்பிரிவுக்கு இ-மெயில் மூலம் கோரிக்கை மனு அனுப்பியதாக தெரிகிறது.
இந்தநிலையில் தாம்பரம் கோட்டத்துக்கு உட்பட்ட துணை மின் நிலையங்களில் பணிபுரியும் 200-க்கும் மேற்பட்ட ஒப்பந்த ஊழியர்களுக்கு பணி வழங்க மறுத்ததாக கூறப்படுகிறது. இதை கண்டித்து சி.ஐ.டி.யு. மின்வாரிய தொழிலாளர்கள் சங்க மாநில தலைவர் ஜெய்சங்கர் தலைமையில் தாம்பரம் மின்கோட்ட அலுவலக வளாகத்தில் ஒப்பந்த ஊழியர்கள் நேற்று மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story